• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

September 20, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.கடந்த 1991ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதுவரை 34 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.இதையடுத்து,இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகிய இருவரின் பெயர்களை விளையாட்டுத் துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில்,2018 க்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது.இதில்,இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விருது வரும் 25ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்படுகின்றது.

மேலும்,இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனி ஆகிய இருவர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து இவ்விருது பெறும் 3வது கிரிக்கெட் வீரர் கோலி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க