• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய கோப்பை:இந்தியா திரில் வெற்றி

September 29, 2018 தண்டோரா குழு

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி 7 வது முறையாக இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

15வது ஆசிய கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா வங்காளதேசம் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.

பின்னர் களமிறங்கிய வங்காளதேச தொடக்க வீரர்கள் லிட்டோன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் நிதானமாக ஆடினார்கள்.இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்னைத் தொட்ட போது மெஹிதி ஹசன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் களமிறக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மறுமுனையில் தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இறுதியில் லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேற அந்த அணி 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.இதனால் இந்தியாவிற்கு வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்களில் தவான் வெளியேற,அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய தோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.அப்போது தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ரன்களில் தோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர்.ஆனால் வெற்றிக்கு 11 ரன்களே தேவை என்ற நிலையில் 23 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார்.அடுத்த சில பந்துகளில் 2 புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.இறுதியில்,50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய அணி ஆசிய கோப்பையில் இதுவரை 1984,1988,1990-91,1995,2010,2016 (20 ஓவர்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்றுள்ள நிலையில் தற்போது 7வது முறையாக வென்றுள்ளது.

மேலும் படிக்க