• Download mobile app
09 May 2024, ThursdayEdition - 3011
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பவுலராக முடிவு செய்தது ஏன்? சச்சின் மகன் அர்ஜூன் விளக்கம்!

January 18, 2018 tamil.samayam.com

வேகப்பந்து வீச்சாளராக முடிவு செய்தது ஏன் என ஜம்பவான் சச்சின் மகன் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கிளப் டி -20 போட்டிகள் நடக்கிறது. இதில் 18 வயதான இந்திய ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் பங்கேற்றார். ஆஸ்திரேலிய மண்ணிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் தனது தந்தை சச்சின் படைத்த சாதனைகள் போலவே அர்ஜூனும் ஆல் ரவுண்டராக அசத்தினார்.

இதற்காக இத்தொடரின் ‘டார்லிங்’ பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தந்தை சச்சினைப்போல பேட்ஸ்மேனாக விரும்பாமல், வேகப்பந்து வீச்சாளராக முடிவெடுத்தது ஏன் என அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அர்ஜூன் கூறுகையில்,’ எனக்கு சிறுவயது முதலே வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்பதே கனவு. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவின் ஜாகிர் கான், பாகிஸ்தானி வாசிம் அக்ரம் ஆகியோர் தான் எனது ரோல் மாடல்கள். அதற்காக வாசிம் அக்ரம் பந்தை எப்படி பிடிப்பது, எப்படி சுவிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்களை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார். பந்தில் எதற்காக எச்சில் துப்புகிறார்கள், எதற்காக பேண்ட்டில் தேய்க்கிறார்கள் என பல வித்தைகளை வாசிம் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.,’ என்றார்.

மேலும் படிக்க