• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

9 வருடங்களுக்கு பின் தன் முதல் சதத்தை பூர்த்தி செய்த ஜடேஜா!

October 5, 2018 தண்டோரா குழு

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது.

நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், அறிமுக வீரராக களமிறங்கிய இளம் பிரித்வி ஷா (134), சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி, முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. கோலி (72), பண்ட் (17) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து, இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, கேப்டன் கோலி (139), ரவிந்திர ஜடேஜா (100*) ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். ரிஷ்ப் பண்ட் (92) சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

கோலியைத் தொடர்ந்து சதம் அடித்த ஜடேஜா டெஸ்ட் வாழ்வில் தன் முதல் சதத்தை அடித்தார். 132 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் அவர் 100 ரன்களை எடுத்தார். அதுவும் தன் சொந்த மண்ணில் சதம் அடித்தால், அவர் சதம் அடித்த உடன் மைதானம் முழுவதும் ஆர்ப்பரித்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் எடுத்த போது, டிக்ளேர் செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது விளையாடி வருகிறது.

மேலும் படிக்க