• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

27 ஆண்டு சாதனையை தகர்த்த ஜோ ரூட்!

September 26, 2017

விண்டீஸ் அணிக்கு எதிராக அரைசதம் விளாசிய இங்கிலாந்தின் ஜோ ரூட், 27 ஆண்டு சாதனையை தகர்த்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள விண்டீஸ் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரண்டு போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டாலில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ரூட் (84), ஸ்டோக்ஸ் (73) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுத்தனர். மொயின் அலி 57 பந்தில் 8 சிக்சர், 7 பவுண்டரிகள் உட்பட 102 ரன்கள் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 369 ரன்கள் குவித்தது.

இதில் 84 ரன்கள் விளாசிய ஜோ ரூட், ஒரே சம்மரில் அதிக ரன்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். இவர் இந்த ஆண்டில் மட்டும் 1342 ரன்கள் குவித்துள்ளார். முன்னதாக கடந்த 1990 முன்னாள் இங்கிலாந்து வீரர் கிராஹம் கூச் 1277 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை ரூட் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் தற்போது தகர்த்துள்ளார். முன்னாள் கேப்டன் குக் (1205 ரன்கள்) இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும் படிக்க