• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராணுவத்தில் 2 மாத பயிற்சியைத் துவங்கினார் தோனி!

July 25, 2019 தண்டோரா குழு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமென்டில் இணைந்து 2 மாத பயிற்சியை இன்று துவங்கினார்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பைப் போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், தோனி கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு எந்த கருத்தும் கூறவில்லை. இதற்கிடையில்,வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் தோனி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. அப்போது, தோனி தாமாக முன்வந்து தொடரில் இருந்து விலகினார். மேலும் தான் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவ பாரசூட் ரெஜிமென்டில் தோனி லெப்டினென்ட் அந்தஸ்தில் பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது ராணுவத்தில் சேர்ந்து தோனி பயிற்சி பெற்று வருகிறார். இதற்கிடையே ராணுவ பாரசூட் ரெஜிமென்டின் அசைவுக்காக காத்திருந்த தோனிக்கு, கடந்த வாரம் ராணுவத்தில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று தோனி 106 பாரா டிஏ பாரசூட் ரெஜிமென்டில் முறைப்படி சேர்ந்துள்ளார். ஜூலை 31 முதல், ஆகஸ்ட் 15-அம் தேதிவரை பயிற்சிக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க