• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யார் பேபி சிட்டர்-ஆக இருந்தார்கள் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்’’- சேவாக்கிற்கு ஹெய்டன் பதிலடி!

February 12, 2019 தண்டோரா குழு

அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. போட்டிகளின்போது இரு அணி வீரர்கள் இடையிலான ஸ்லெட்ஜிங் அதிக கவனம் பெற்றது.

ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷ்ப் பந்த்-ஐ பார்த்து என் குழந்தைகளுக்கு ‘பேபிசிட்டர்’ஆக இருக்கிறாயா? என்று கேட்டார். ரிஷப் பந்தும் ஆஸ்திரேலிய பிரதமர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டபோது, டிம் பெய்னின் குழந்தையை எடுத்து கொஞ்சினார். டிம் பெய்ன் மனைவி. ரிஷப் பந்த் சிறந்த ‘பேபி சிட்டர்’ என்று டுவீட் செய்திருந்தார். இந்த சம்பவம் அந்தத் தொடர் முழுவதும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இதற்கிடையில், வரும் 24-ம் தேதி ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இதனை மையப்படுத்தி இந்தப் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் இந்த ‘பேபி சிட்டர்’ விளம்பரத்தை எடுத்துள்ளது. அந்த விளம்பரத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் ‘பேபிசிட்டிங்’ விளம்பர படத்தில் நடித்தார். அதில் நடித்த சேவாக் ‘‘நாங்கள் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, அவர்கள் எங்களிடம் பேபிசிட்டராக இருக்க முடியுமா?’’ என்று கேட்டார்கள். நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாங்க.. நீங்கள் சொல்வதை செய்கிறோம்’’ என்று உறுதியளிப்பதுபோல் கூறுகிறார்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய வீரர்களைக் கிண்டலடிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த அந்த அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டரில், “உங்களை எச்சரிக்கிறேன். ஆஸ்திரேலியர்களை ஒருபோதும் நகைச்சுவையாக எடுக்காதீர்கள்.. வீரு பாய். உலகக்கோப்பை யாரிடம் இருக்கிறது என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்” என காட்டமாக கூறியுள்ளார்.

இந்த விளம்பரத்தை குறிப்பிட்டு மேத்யூ ஹெய்டன் பதிவிட்டுள்ள டுவிட்டரில் ‘‘எச்சரிக்கிறேன்… ஆஸ்திரேலியா அணியை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் சேவாக், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா. உலகக்கோப்பை போட்டியின்போது யார் பேபி சிட்டர்-ஆக இருந்தார்கள் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்’’ என்று பதில் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க