• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெர்த் டெஸ்ட் போட்டி: 2-ம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவிப்பு

December 15, 2018 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட தொடர் நடைப்பெற்று வருகின்றது. முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்னுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்திய அணியின் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸி. அணியில் அதிகபட்சமாக ஹாரிஸ் 70, டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் எடுத்துள்ளனர்.

இதையடுத்து, தற்போது இந்திய அணி முதல் இன்னின்ஸ் விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்துள்ளது. கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க