• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாண்டியா, கே.எல்.ராகுல் மீது போலீஸ் வழக்குப் பதிவு!

February 6, 2019 தண்டோரா குழு

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் விவகாரம் மீண்டும் பூதாகரமாகி வருகிறது.

இந்தியில் புகழ்பெற்ற தனியார் தொலைகாட்யின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது இயக்குநர் கரண் ஜோஹர் பல கேள்விகளை கேட்டார். அதற்கு வெளிப்படையான பதில்களை இருவரும் கொடுத்தனர். அப்போது பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும், அதனைப் பற்றி தனது வீட்டில் வெளிப்படையாக பேசுவதையும் பற்றி ஹர்திக் பாண்டியா கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இது குறித்து பிசிசிஐயிடம் இருந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு எச்சரிக்கை அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசியது மேலும் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பாண்டியா சார்பில் பதில் அளிக்கப்பட்டது. பாண்ட்யா மற்றும் கே. எல்.ராகுலை 2 தொடர்களில் விளையாடுவதற்கு தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டு மேலும் பாண்டியாவுடன் விளம்பர ஒப்பந்தம் செய்திக்கொண்ட நிறுவனங்களும் அதனை ரத்து செய்தனர்.பின்னர், ஹர்திக் பாண்டியா மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிசிசிஐ உத்தரவிட்டது.ராகுல், பாண்டியாவிற்கு தண்டனை வழங்குவதை முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், பல்வேறு மகளிர் அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யதுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க