• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பல சாதனைகள் படைத்த இளம் இந்திய அணி!!

October 2, 2017 tamilsamayam.com

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றிய இந்திய அணியின் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளனர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில் இந்திய அணி 3-1 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதிய ஐந்தாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இத்தொடரை 4-1 என வென்றது. இதன் சில சாதனைகள்.

334

இத்தொடரில் ஒரே போட்டியிக் அதிக பட்ச ரன்கள் அடித்த அணி என்ற பெருமை பெற்றது ஆஸ்திரேலியா (334 ரன்கள்)

296

இத்தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பின்ச் (250 ரன்கள்), பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா (296) முதலிடம் பிடித்தார். சதம் விளாசிய ரோகித் சர்மா இப்போட்டியின் ஆட்டநாயகன் விருது வென்றார்.

180

இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் (குறைந்த பட்சம் 5 இன்னிங்ஸ்) கோலி அடித்த மூன்றாவது குறைந்த பட்ச ரன்கள் (180 ரன்கள்) இந்த தொடரில் தான். முன்னதாக கடந்த 2013ல் இங்கிலாந்துக்கு எதிராக 155 ரன்களும், 2008ல் இலங்கைக்கு எதிராக 159 ரன்களும் குறைந்த பட்சமாக எடுத்துள்ளார்.

125

தவிர, ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலும் ரோகித் சர்மா (125 ரன்கள்) ஆஸ்திரேலியாவின் பின்ச்சை (124 ரன்கள்) பின்னுக்கு தள்ளினார்.

10

இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கூல்டர் நைல் அதிகபட்சமாக 10 விக்கெட் கைப்பற்றி இத்தொடரின் சிறந்த வீரர் விருது வென்றார்.

8

இத்தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, ரகானே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அசத்தியது.

தவிர ரோகித், ரகானே ஜோடி இந்த ஆண்டில் (2017) 100 ரன்களுக்கு மேல் 8வது முறையாக சேர்த்து அசத்தியது.

6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என வென்ற இந்திய அணி, சர்வதேச ஒருநாள் அரங்கில் தொடர்ந்து 6வது ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது.

5

இப்போட்டியில் 5 சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மா ஒரே போட்டியில் அதிக முறைகள் 5 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சேவக் (6 முறை ) சாதனையை சமன் செய்தார்.

இப்பட்டியலில் ஜாம்பவான் சச்சின் (8 முறை), கங்குலி (7 முறை) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

4

இத்தொடரின் ஒரே போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் (4 விக்கெட்) முதலிடம் பிடித்தார்.

1

இந்திய அணியின் கேதர் ஜாதவ், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் முதல் முறையாக முழுமையாக 10 ஓவர்கள் வீசினார். முன்னதாக இவர் பவுலிங் செய்த 16 இன்னிங்சில் அதிகபட்சமாக 8 ஓவர்களே வீசினார்.

* தவிர, ஜாதவ் பவுலிங் செய்த 17 இன்னிங்சில் மொத்தமாக 16 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

1

இரு அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு பின் (2008, எதிர் – இங்கிலாந்து) முதல் முறையாக 200+ ரன்களும் 5+ விக்கெட்டுகளும் எடுத்த முதல் வீரர் ஹர்திக் பாண்டியா தான்.

மேலும் படிக்க