• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பஞ்சாப் அணியை பஞ்சராக்கிய பெங்களூரு – 88 ரன்னுக்கு ஆல் அவுட்

May 15, 2018 tamilsamayam.com

பெங்களூரின் அற்புதமான பவுலிங்கால் அணி 88 ரன்னில் ஆல் அவுட்டாகி மோசமாக விளையாடியுள்ளது.

டாஸ் வென்ற முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ராகுல் 21, கெய்ல் 18 என ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்து அவுட்டாகினர்.

அடுத்து வந்த கருண் நாயர் 1, பின்ச் 26,ஸ்டோயின்ஸ் 2,மாயக் அகர்வால் 2,அஸ்வின் 0,டை 0, மோகித் சர்மா 3,ராஜ்புட் 1 என வரிசையாக அவுட்டாகினர்.அக்ஸர் படேல் கடைசி வரை அவுட்டாகாமல் 9 ரன் எடுத்து களத்தில் இருந்தார்.உமேஷ் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பஞ்சாப் அணியின் அஸ்வின்,மோகித் சர்மா,அன்கிட் ராஜ்புட் ஆகிய 3 வீரர்கள் மிக மோசமான வகையில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

பெங்களூரு அணி பஞ்சாப் அணியை மிக குறைந்த ரன்னில் அவுட்டாக்கியுள்ள நிலையில்,வேகமாக ரன் சேர்த்து வெற்றியை பெறும் பட்சத்தில் பெங்களூருக்கு ரன் ரேட் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்து 2 போட்டியிலும் பெங்களூரு வெல்லும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க