இந்திய நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி நியூசி.அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
இந்திய ஆண்கள் அணி நியூசிலாந்துத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய மகளிர் அணியும் நியூசிலாந்து மகளிர் அணியும் மேற்கொள்ளும் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. அதில் மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில், இந்திய, நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.4 ஓவரில் 192 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது.
இதனை தொடர்ந்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எளிதாக வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா 104 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசி 105 ரன்கள் குவித்த ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் ரோட்ரிக்ஸ் 81*, ரன்கள் குவித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது