• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நியூசிலாந்திற்கு 4 வது ஒருநாள் போட்டி: 92 ரன்னில் சுருண்டது இந்திய அணி

January 31, 2019 தண்டோரா குழு

நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 92 ரன்னில் சுருண்டது

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து, இரு அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. பணிச்சுமை காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக களமிறங்கினார். இது அவரது 200வது போட்டியாகும்.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன், பவுலிங்கை தேர்வு செய்தார். தோனி இன்று களமிறங்காத நிலையில், தினேஷ் கார்திக் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டார். அதைபோல் அறிமுக வீரர் கிரில் இன்று களமிறங்கினார்.

கடந்த போட்டிகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஷிகர் தவான் (13 ரன்கள்), ரோகித் சர்மா (7 ரன்கள்), அம்பத்தி ராயுடு (0) , தினேஷ் கார்த்திக் (0), சுப்மான் கில் (9 ரன்கள்) என மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால், இந்திய அணி 13.1 ஓவர்கள் நிலவரப்படி 6 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்து தடுமாறியது.

அடுத்து பாண்ட்யா 16, குல்தீப் 15 ரன்னுக்கு அவுட்டாகினர். கலீல் அகமதுவும் 5 ரன்னுக்கு போல்டாக இந்திய அணி 30.5 ஓவரில் 92 ரன்னுக்கு சுருண்டது. நியூசிலாந்து சார்பில் போல்ட் 5, கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் படிக்க