• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நியுசிலாந்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி : இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது

January 28, 2019 தண்டோரா குழு

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று 3வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கியது. இப்போட்டியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா அணியில் இடம் பெற்றார்.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் முன்ரோ 7 ரன்களிலும், கப்டில் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்சன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ராஸ் டெய்லர் மற்றும் டிம் லாதம் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 119 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. அணியின் ஸ்கோர் 178 ரன்களாக இருக்கும் போது டிம் லாதம் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் 106 பந்துகளில் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து நியூசிலாந்து அணி 243 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்களையும் , சாஹல், ஹர்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்கத்தில் அதிரடியாக விளையாடி தவான் 27 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்த தவான் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் கோலி ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். 2-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தனர். 77 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 62 ரன்கள் எடுத்தபோது ரோகித் சர்மா சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலியும் 60 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை இழந்தார்.பின்னர் ஜோடி சேர்ந்த ராயுடு-கார்த்திக் சிறப்பாக ஆடி இந்தியாவை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். இறுதியில் 43 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றி தொடரை வென்றது.

மேலும் படிக்க