• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தோனி என்னுடன் இருக்கும் போது நம்பிக்கை உடையவனாக நான் உணர்வேன் – ரிஷப் பந்த்

December 12, 2018 தண்டோரா குழு

தோனி என்னுடன் இருக்கும் போது நம்பிக்கை உடையவனாக நான் உணர்வேன் என ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் 11 கேட்சுகளைப் பிடித்து இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேக் ரஷல், தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஏபி டீவில்லியர்ஸ் ஆகியோரின் உலக சாதனையைச் சமன் செய்தார்.

இதற்கிடையில், ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவில் உள்ள இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அடிலெய்ட் டெஸ்டில் இப்படி ஒரு சாதனையை நான் நிகழ்த்துவேன் என்று நினைக்கவில்லை. ஆனால், சில நல்ல கேட்சுகளைப் பிடித்திருக்கிறேன், ”எனக்கு விக்கெட் கீப்பிங்கில் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுத்தவர் எம்.எஸ்.தோனிதான். பல்வேறு விக்கெட் கீப்பர்கள் அணியில் உருவாகவும் தோனிதான் காரணமாக இருந்தார். தோனி இந்திய நாட்டின் ஹீரோ. தோனியிடம் இருந்து கிரிக்கெட் வீரராக, தனி மனிதராக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எப்போழுதெல்லாம் தோனி என்னுடன் இருக்கிறாரோ அப்போது மிகவும் நம்பிக்கை உடையவனாக நான் உணர்வேன் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க