• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய சச்சினுக்கு தமிழிலேயே நன்றி தெரிவித்த ஹர்பஜன் சிங்

July 3, 2018 தண்டோரா குழு

தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய சச்சினுக்கு தமிழிலேயே ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங்
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

ஹர்பஜன் சிங் ஏலம் எடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தமிழில் டுவீட் அசத்தினார். அதன் பின் ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கு பின்னும் தமிழில் டுவீட் செய்து அசத்தி வந்தார். இதனால் ஹர்பஜனின் தமிழில் டுவீட்டுக்கே தனி ரசிகர்கள் இருந்தார் கள் என்றே சொல்லலாம். இதற்கிடையில் , இன்று ஹர்பஜன் சிங் பிறந்த நாள் என்பதால் அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஹர்பஜனின் பிறந்த நாளையொட்டி அவரை போலவே தமிழில் வாழ்த்து சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்
எனக் கூறியுள்ளார்.

இதற்கு ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், நன்றி சொல்ல உங்களுக்கு !! வார்த்தை இல்லை எனக்கு நான் தான் மயங்குறேன் தமிழில் வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணா எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க