• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் கோலி ‘நம்பர்-1’ ‘டாப்-10’ல் கால் பதித்த பும்ரா !

August 27, 2019 தண்டோரா குழு

சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி,,) இன்று வெளியிட்டது. அதில் இந்திய கேப்டன் விராட் கோலி 910 புள்ளிகளுடன் தொடர்ந்து ‘நம்பர்-1’ இடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 904 புள்ளிகளுடனும் மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 878 புள்ளிகளுடனும் உள்ளனர். இந்திய வீரர் புஜாரா (856) நான்காவது இடத்தில் நீடிக்கிறார்.

மற்ற இந்திய வீரர்கள் யாரும் ‘டாப்-10’ல் இடம் பெறவில்லை. ரஹானே (709) 11வது இடத்துக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அசத்தி ஹீரோவாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் (693) 13வது இடத்துக்கு முன்னேறினார். அதைபோல், சிறந்த பவுலர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (774) 7வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய பவுலர் ரவிந்திர ஜடேஜா (763) தனது 10வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (908), தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா (851), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (814) ஆகியோர் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் (433) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (411) இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் (399) மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (395) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

மேலும் படிக்க