• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கிங்ஸ் அணியை அதிரடியாக வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்!!

July 19, 2018 tamilsamayam.com

தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது.

டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் கடந்த 11ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது.இந்த ஆண்டு முதல் முறையாக வெளிமாநில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில்,திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் மைதானத்தில் இன்று நடைபெற்ற 7வது போட்டியில்,லைகா கோவை கிங்ஸ் அணியும்,திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.இதில் முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி,முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியில்,மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, தொடக்க வீரர் ஷாருக்கான் பந்துகளை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விரட்டினார். சிறப்பாகவிளையாடிய அவர்,54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் குவித்து அவுட்டானார்.

பின்னர் வந்த அகில் ஸ்ரீநாத் அதிரடியாக விளையாடி 54 ரன்கள் குவிக்க கோவை அணி,20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில்,தொடக்க வீரர் ஜெகதீசன் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடித்து 66 ரன்களுடன் கடைசி வரை நிலைத்து நின்று ஆடினார்.மறுபுறம்,முதல் விக்கெட் இழப்பிற்கு களமிறங்கிய சத்ருவேத் பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டார்.அதிரடியாக விளையாடிய சத்ருவேத்,36 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம்,திண்டுக்கல் டிராகன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும் படிக்க