• Download mobile app
09 May 2024, ThursdayEdition - 3011
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிராமத்திலிருந்து ஒலிம்பிக் பதக்கத்துக்கான பாலமே ’கேலோ இந்தியா’வின் நோக்கம்: ரத்தோர்!

February 10, 2018 tamilsamayam.com

கேலோ இந்தியாவின் நோக்கமே கிராமத்தை ஒலிம்பிக்குடன் இணைப்பதுதான் என்று மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் இன்று டைம்ஸ் இன்டர்நெட் லிமிடெட்டின் தலைமை ஆசிரியர் ராஜேஷ் கல்ராவிடம் தெரிவித்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கில் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சரானார். இவர் பொறுப்பு கிராமத்தில் இருந்து இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில் கேலோ இந்தியா பள்ளி விளையாட்டு என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்படி இதில் பங்கேற்று விளையாடுபவர்களில் திறமையான 1,000 இளைஞர்களை தேர்வு செய்து ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வீதம் 8 ஆண்டுகளுக்கு ஸ்காலர்ஷிப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இதன்படி கேலோ இந்தியா பள்ளி விளையாட்டின் முதல் போட்டி கடந்த 8 நாட்களாக டெல்லியில் நடந்து இன்று முடிவடைந்தது. இதை முன்னிட்டு ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோரை டைம்ஸ் இன்டர்நெட் லிமிடெட்டின் தலைமை ஆசிரியர் ராஜேஷ் கல்ரா சந்தித்து பேட்டி கண்டார்.

கேலோ இந்தியா பள்ளி விளையாட்டு பற்றி கூறவும். இது எவ்வாறு மற்ற முந்தைய இந்தியா விளையாட்டுகளில் இருந்து வேறுபடுகிறது?

முன்பு விளையாட்டைக் காண சிறிய பார்வையாளர்கள் இருந்தனர். தற்போது இது அதிகரித்துள்ளது. லைவ் டிவி, லைவ் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். ஸ்டேடியத்தின் தரம், விளையாட்டு சாதனங்கள், பயிற்ச்சியாளர்கள் என அனைத்து வகையிலும் விளையாட்டின் தரம் உயர்ந்துள்ளது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும், பதக்கம் பெற என்ற நோக்கத்தில் விளையாட்டுக்கு அதிகமாக வருகின்றனர்.

இதை எப்படி நீங்கள் தக்க வைத்துக் கொள்ள இருக்கிறீர்கள்?

விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது மாநில அரசுகளின் பணி. மத்திய அரசு ஒருங்கிணைத்து இவர்களை ஊக்குவிக்கும். 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என்பதால் இந்த விளையாட்டு சிறந்ததாக, ஆர்வமூட்டும் விளையாட்டாக இருக்கும்.

கேலோ இந்தியா பள்ளி விளையாட்டின் அடுத்த கட்டம் என்ன?

கிராமத்தில் இருக்கும் இளைஞர்களை ஒலிம்பிக் அழைத்து செல்ல வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். கிராமப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மாவட்ட விளையாட்டுகளில் பங்கேற்று, பின்னர் மாநில விளையாட்டுகளில் பங்கேற்பார்கள். பின்னர் இவர்கள் 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கும் விளையாட்டுக் போட்டிக்கு வருவார்கள். அங்கிருந்து கல்லூரி விளையாட்டுக்கு சென்று பின்னர் கேலோ இந்தியா கல்லூரி விளையாட்டுக்களில் பங்கேற்பார்கள்.

இது எப்போது நிகழும்?

இன்றில் இருந்து இன்னும் ஓராண்டில் இது நிகழும்.

ஒலிம்பிக் பரிந்துரை அமலாக்கம் எந்தளவிற்கு உள்ளது?

ஒலிம்பிக் பரிந்துரை கமிட்டி கொடுத்த பரிந்துரைகள் விரைவில் அமல்படுத்தப்படும். ஒழுங்குமுறை கமிட்டி அமைக்க வேண்டும். இதில் சிஇஓ மற்றும் மேலாளர்கள் இடம் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. விரைவில் அமைக்கப்பட்டு 2020 ஒலிம்பிக் போட்டி எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

ஒவ்வொரு பள்ளியும் விளையாட்டில் அக்கறை செலுத்த வேண்டும். எங்களிடம் பலவேறு திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பெண்களுக்கான விளையாட்டு மற்றும் 12 வயதில் இருக்கும் திறமைசாலிகளை கண்டறிவது. இதற்கான ஆரம்பக்கட்ட வேளைகளில் இறங்கி விட்டோம்.

இவ்வாறு ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.

மேலும் படிக்க