• Download mobile app
16 Oct 2026, FridayEdition - 3901
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐசிசி U-19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி:பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

January 30, 2018 தண்டோரா குழு

ஐசிசி U-19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

ஐசிசி U-19 உலக கோப்பை 2வது அரைஇறுதி போட்டியில் இந்தியா அணி , பாகிஸ்தான் அணியோடு மோதியது.கிறைஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 102 ரன்கள் விளாசினார்.

இதனையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் இஷான் போரால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

 

மேலும் படிக்க