• Download mobile app
16 Oct 2026, FridayEdition - 3901
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய ஜூனியர் அணி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த டிராவிட்டுக்கு சச்சின்,சேவாக் வாழ்த்து

February 3, 2018 தண்டோரா குழு

ஜூனியர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோப்பையைக் வென்றது.

ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய,ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அந்த அணி 47.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 38.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியின் தொடக்க வீரர் மன்ஜோத் கல்ரா (101*) அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.

மேலும்,இந்திய அணி ஜூனியர் உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசும், இந்திய ஜூனியர் அணி வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில்,இந்திய ஜூனியர் அணி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த இந்திய அணியின் பயிற்சியாளர்  டிராவிட்டுக்கு சச்சின்,சேவாக் உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க