• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

December 18, 2018 தண்டோரா குழு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது. முதல் போட்டியில் இந்திய 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்னுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்திய அணியின் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸி. அணியில் அதிகபட்சமாக ஹாரிஸ் 70, டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் எடுத்துள்ளனர். பின்னர் முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 283 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 123(257) ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் ரன்களை விட 43 ரன்கள் குறைவாக இந்திய அணி எடுத்தது.

43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியாவை விட 286 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் சமி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 287 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரரான லோகேஷ் ராகுல் 0(4) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 4(11) ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர் வந்த கோலி 17 ரன்னிலும், முரளி விஜய் 20 ரன்னிலும், ரஹானே 30 ரன்னிலும் அவுட் ஆகினர்.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 24 ரன்களுடனும், பந்த் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி இன்றைய நாள் ஆட்டத்தை தொடங்கியது. விஹாரி 28 ரன்களிலும், பன்ட் 30 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி 140 ரன்களுக்கு ஆள்அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியாவை 146 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் வருகிற டிச.26-ம் தேதி தொடங்க உள்ளது.

மேலும் படிக்க