• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயல்வேன் – பாக்.வேக பந்து வீச்சாளர் ஹசன் அலி

September 6, 2018 தண்டோரா குழு

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயல்வேன்என பாக்கிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஹாங்காங் ஆகிய 6 அணிகள் விளையாடவுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஹசன் அலி திகழ்கிறார்.

இந்நிலையில், இன்று லாகூரில் செய்தியாளர்களுக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

இந்திய அணி வீரர்கள் நெருக்கடியில் இருக்கும்போது அவர்களை விட நாங்கள்தான் டாப். சாம்பியன்ஸ் டிராபியில் அப்படித்தான் அவர்களை தோற்கடித்தோம்.எங்களைப் பொறுத்தவரை வரும் 19-ம் தேதி நடக்கும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, ஒட்டுமொத்த ஆசியப் போட்டித் தொடரிலும் கவனம் செலுத்துவோம். எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, எங்களுக்கு புதிய உத்வேகம், வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கை வந்துவிடுகிறது.இந்தியாவுக்கு எதிராக நான் விளையாடும் போது என்னுடைய விக்கெட் வீழ்த்தும் திறமையை 10 மடங்கு உயர்த்திக்கொள்ள விரும்புகிறேன்.ஆனால் என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம். ஒவ்வொரு பந்துவீச்சாளரும் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்குத்தான் அதிகமாக விரும்புவார்கள், ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயல்வேன். எங்கள் அணிக்கு வெற்றி தேடித் தருவேன் எனக் கூறியுள்ளார்.

மேலும்,ஆசியக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விராட் கோலி இல்லாமல் வருவது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாகும். இதனால், இந்திய அணிதான் மிகுந்த நெருக்கடியில் சிக்கப்போகிறார்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க