• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இங்கிலாந்து அணி திணறுவது ஆச்சரியமாக உள்ளது- விராட் கோலி

June 29, 2019 தண்டோரா குழு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ICC-யின் புதிய விதிமுறைப்படி போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் ஒரே நிற உடையில் களம் இறங்க கூடாது. அதனால் போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து ஜெர்சியில் எந்த மாற்றமும் செய்து கொள்ள தேவையில்லை. இதனிடையே இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன. இப்போட்டியில் இந்திய அணி வழக்கமான ஜெர்சியுடன் விளையாட போவதில்லை, அதற்கு பதிலாக இந்திய அணி ஆரஞ்சு நிறம் பெரும்பாலும் கொண்ட ஜெர்ஸியுடன் களமிறங்கும் என ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. புதிய ஜெர்சி குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“இத்தொடரில் இங்கிலாந்து தான் ஆதிக்கம் செலுத்தும் என நினைத்தோம். ஆனால் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சொந்தமண்ணில் இங்கிலாந்து அணி திணறுவது ஆச்சரியமாக உள்ளது. இந்திய அணியின் புது ஜெர்சி குறித்து கோலி கூறுகையில், “எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு போட்டியில் தான் இந்த ஜெர்சி அணிந்து விளையாடுவோம். இனிவரும் போட்டிகளிலும் இதே ஜெர்சி அணிந்து விளையாடுவோமா என்பது எனக்கு தெரியாது” என தெரிவித்தார்.

மேலும் படிக்க