• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அடிவாங்கிய இந்தியா:விண்டீஸ் ‘திரில்’ வெற்றி!

July 3, 2017 tamilsamayam.com

ஆண்டிகுவாவில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் தனி ஒருவன் தோனியின் போராட்டன் தருசாக போக, வெஸ்ட் இண்டீஸ் அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் ’திரில்’ வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் இந்திய அணி மெகா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி வென்றது. இதையடுத்து இந்திய அணி, இத்தொடரில் 2-0 என முன்னிலை வகித்தது.

எல்லாமே வெற்றி:

இந்நிலையில் ஒரு அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி, ஆண்டிகுவாவில் நடந்தது. ஆனால் போட்டி துவங்கும் முன் மழை குறுக்கிட்டதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இத்தொடரில் நான்காவது முறையாக ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தினேஷ் வாய்ப்பு:

இந்திய அணியில் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் நீக்கப்பட்டு, தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். அஷ்வினுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா இடம் பிடித்தார். இதேபோல புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஷமி அணியில் இடம் பிடித்தார்.

ஆமை வேக ஆட்டம்:

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஆமை வேக ஆட்டத்தை கடைபிடித்தனர். அந்த அணியில் ஹோப் (35), லீவிஸ் (35) அதிக்பட்சமாக ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இதையடுத்து அந்த அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 189 ரன்கள் மட்டும் எடுத்தது.

ரகானே மிரட்டல்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தவான் (5), கோலி (3), தினேஷ் கார்த்திக் (2) என ஒருவரும் தாக்குபிடிக்கவில்லை. துவக்க வீரர் ரகானே (60) அரைசதம் கடந்து கைகொடுத்தார்.

‘தல’ தோனி தன்னம்பிக்கை:

இதன்பின் நங்கூரமாக நடுக்களத்தில் நின்ற அனுபவ வீரர் தோனி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை ஒரே ஆளாக ஒரு கைபார்த்தார். இவர் பவுண்டரிகள் அடிக்கவில்லை என்றாலும், இளம் வீரர்களுக்கு சவால் விடும் விதமாக, ஒரு ரன்களை இரண்டு ரன்களாக கிடைத்த வாய்ப்பில் எல்லாம் கில்லாடியாக செயல்பட்டார்.

இவரை அவுட்டாக்க, வெஸ்ட் இண்டீஸ் இளம் வேககங்கள் தீட்டிய திட்டம் எல்லாம் தவிடு பொடியானது. இந்நிலையில் இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ரவிந்திர ஜடேஜா (11) அவசரப்பட்டு அவுட்டாக, இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

பின் வந்த குட்டிப்பையன் குல்தீப் துணையுடன் தன்னம்பிக்கையாக விளையாடிய தோனி (54), கடைசி நேரத்தில் சொதப்பலாக அவுட்டாக, அடுத்து வந்த உமேஷ் (0), ஷமியை (1) ஹோல்டர் கவனித்துக்கொண்டார். இதையடுத்து இந்திய அணி, 49.4 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து விண்டீஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

விண்டீஸ் அணி சார்பில் கேப்டன் ஹோல்டர் அதிகபட்சமாக 5 விக்கெட் சாய்த்தார்.

மேலும் படிக்க