• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.நா. சபையின் சட்ட வல்லுநராக இந்திய வக்கீல் தேர்வு

November 4, 2016 தண்டோரா குழு

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இந்தியாவின் இளம் வழக்குறிஞர் அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அனிருத் ரஜ்புத் (33) என்ற அவருடன் மொத்தம் 34 பேரை ஐ.நா. சபையின் பொதுக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சர்வதேச சட்ட ஆணையத்திற்கு சுழற்சி முறையில் புதிய வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவர். அதற்கான வாக்குப் பதிவு நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 4) நடத்தப்பட்டது.

ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கு ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆப்பிரிக்கா, ஆசியா-பசிபிக், கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, கரிபியன் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை நியமிக்க தேர்தல் நடத்தப்பட்டது.

இந்திய வழக்கறிஞர் அனிருதா ராஜ்புத்(33) என்பவர் 160 வாக்குகளை பெற்று அபார வெற்றியை அடைந்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக ஆசியா-பசிபிக் துணை கண்டத்தில் உள்ள நாடுகளின் சார்பில் போட்டியிட்ட ஜப்பானைச் சேர்ந்த வக்கீல் ஷின்யா முராசே 148 வாக்குகளையும், மூன்றாவது இடத்தில் வந்த சீன வக்கீல் ஹுய்காங் ஹுவாங், ஜோர்டான் வக்கீல் மஹ்மூத் டைபல்லா ஆகியோர் 146 வாக்குகளையும் பெற்றனர்.கொரியா வக்கீல் கி கப் பார்க் 136 வாக்குகளும், கத்தார் வக்கீல் அலி பின் பெட்டாய்ஸ் அல்-மர்ரி 128 வாக்குகளையும், வியட்நாம் வக்கீல் ஹாங் தாவ் குயென் 120 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்திய வழக்கறிஞர் அனிருத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார்.

மத்திய அரசின் வெளியுறவுத் துறையிலும் சட்ட ஆலோசகராக இருந்து வரும் இவர் இந்தியாவின் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய சட்ட கமிஷனால் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஐநா., சபையில் அவர் சமர்ப்பித்த சுயவிவரத்தின் படி,லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளியின் முன்னாள் மாணவரான அவர், ரஜ்புத் 2015ம் ஆண்டு இந்தியாவின் மாதிரி இருதரப்பு முதலீடு ஒப்பந்தம் குறித்து படிக்கவும் மற்றும் விளக்கம் கூறவும் இந்திய சட்ட ஆணையம் நியமித்த வல்லுனர் குழுவின் உறுப்பினராக இருந்தார். சர்வதேச கடல்சார் சட்டம், சர்வதேச வர்த்தக சட்டம் தொடர்பாக பல ஆய்வு நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

அனிருத் ரஜ்புத் தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் தூதர் அக்பருதீன்.

மேலும் படிக்க