• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

www இணையத்தின் பிறந்தநாளன இன்று டூடுல் வெளியிட்ட கூகுள்

March 12, 2019 தண்டோரா குழு

உலகமே தற்போது பயன்படுத்தி வரும் www என்ற வேர்ல்டு வைடு வெப்-பை கண்டுபிடித்து 30 வருடங்களானதை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இன்று அதன் டூடுல் வெளியிட்டுள்ளது.

வேர்ல்டு வைடு வெப்-பை சர் டிம் பர்னர்ஸ் லீ என்பவர் www என்ற வளையதளத்தை கண்டுபிடித்தார். இவர் ஜெனீவாவில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தில் வேலைபார்த்து வந்த போது கணினிகள் தமக்கிடையில் எளிமையாக தகவல் பரிமாறுவதற்கான இணைய மொழியான HTMLஐ உருவாக்கினார். இதைத்தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி www என்ற வேர்ல்டு வைடு வெப்-பை கண்டுடித்தார். HTTP அப்லிகேஷனையும் இவர்தான் கண்டுபிடித்தார். பின்னர் 1991 ஆம் ஆண்டு ’எக்ஸ்டர்னெல் வெப் சர்வீஸ்’ போன்ற விஷயங்கள் சேர்க்கப்பட்டு, 1993 ஆம் ஆண்டு மக்களின் பயன்பட்டிற்கு இணையதளம் வந்தது.

தற்போது உலகமே பயன்படுத்திக்கொண்டு இருக்கும் www என்ற வேர்ல்டு வைடு வெப்-பை கண்டுபிடிக்கப்பட்டு 30 வருடங்களானதை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. இந்த டூடுலில் பார்பதற்கு அந்த காலத்தில் கணினிகள் எப்படி இயங்கியது என்பதுபோல ஓவியம் வரையப்படுள்ளது.

மேலும் படிக்க