• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்க ராணுவத்தில் மகள்கள் சேர சம்மதம் தெரிவித்த ஒபாமா

September 30, 2016 தண்டோரா குழு

தன்னுடைய இரு மகள்களும் ராணுவத்தில் சேர விரும்பினால் முழுமையாக ஆதரிப்பேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.

அமெரிக்காவின் போர்ட் லீ ராணுவ முகாமில் நடந்த சி.என்.என். டவுன்ஹால் கூட்டம் ஒன்றில், ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் கலந்து கொண்டார்.

அங்கு அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், உங்கள் மகள்கள் மாலியா, சாஷா இருவரும் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பினால், அனுமதி அளிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஒபாமா, நிச்சயம், அவர்கள் அமெரிக்க ராணுவத்தில் சேர விரும்பினால், சேர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஊக்கப்படுத்துவேன். அதே நேரத்தில், அவர்கள் போருக்கு சம்பந்தப்பட்ட ஆயத்தங்களை கையாளும் போது, கண்டிப்பாக பதற்றம் அடைய மாட்டேன் என்று நான் சொல்ல முடியாது. காரணம் நம்முடைய குழந்தைகள் எப்பொழுதும் நம் குழந்தைகள்தான். அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளத்தான் பெற்றோர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்.

மேலும், எனக்கு 18 வயதாக இருக்கும் போது அமெரிக்க ராணுவத்தில் சேர விரும்பினேன்.அப்போது தான் வியட்னாம் போர் முடிவுக்கு வந்தது. ஆனால் நம் நாடு அப்போது எங்கும் போரில் ஈடுபடவில்லை.அதனால் நான் வேறு ஒரு வழியை தேர்ந்தெடுத்தேன் மற்றும் நான் ராணுவத்தில் சேர இருந்த திட்டமும் மாறிப்போனது.

மேலும், வெள்ளை மாளிகையில் பணிபுரியும் பலர் ராணுவத்தில் பணியற்றயுள்ளனர். தற்போது அவர்களுடைய பிள்ளைகளும் அதில் பணியாற்றி வருகின்றனர். முதலில் அவர்கள் குறித்த கவலை பெற்றோருக்கு இருந்தாலும், தங்கள் பிள்ளைகள் குணமும், வாழ்க்கையும் எவ்வாறு உறுதியாக மாறியுள்ளது என்று பார்க்கும் போது அது பெற்றோருக்கு பெருமையை தருகிறது என்று தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் பிள்ளைகளை ராணுவத்தில் சேர அனுமதிப்பேன் என்று ஒபாமா கூறினாலும், பிள்ளைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளத்தான் பெற்றோர் விரும்புவார்கள் என்ற சராசரி பெற்றோரின் உணர்வை தானும் கொண்டிருப்பதை உணர்த்தியது அனைவரையும் கவர்ந்தது.

மேலும் படிக்க