• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளுக்காக 43 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழ்ந்து வந்த தாய்.

July 23, 2016 தண்டோரா குழு

உலகில் வாழும் எத்தனையோ பெண்கள், தங்களது குடும்பத்தை காப்பாற்றப் பல தியாகங்களைச் செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக இதுவரை யாரும் செய்யாத ஒரு விஷயத்தை எகிப்து தாய் ஒருவர் செய்துள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த சிசா அபு தாவோக்(64) திருமணமாகி கர்ப்பிணியாக இருந்த போதே அவருடைய கணவர் இறந்துவிட்டார். பிறகு, அவருக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அவர்களது குடும்ப வழக்கப்படி, பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. கணவரை இழந்து, பெண் குழந்தையோடு கஷ்டப்பட்ட சிசா, தனது குழந்தையை கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வளர்க்க எண்ணி ஒரு புதுமையான யோசனையைப் பின்பற்றினார்.

அதாவது, அவரைப் பற்றி அறியாத ஒரு கிராமத்துக்குச் சென்ற சிசா, அங்கு ஆண் வேடமிட்டு, ஆண்களுக்கான ஆடையை மிகவும் தொலதொலவென்று தைத்து அணிந்து கொண்டு கட்டடப்பணிகளுக்குச் சென்றார். சாலையோரம் செருப்புக்கு பாலீஷ் போட்டும் பணியையும் செய்தார்.

தற்போது தனது பெண்ணை நல்ல முறையில் வளர்த்து, அவளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். சுமார் 43 ஆண்டுகளாக ஆண் வேடம் இட்டு ஆண்கள் செய்யும் பணிகளைச் செய்த வந்துள்ளார். இதை அறிந்த அந்த நாட்டின் சமூக சேவை நிறுவனம் ஒன்று அவருக்கு லட்சியத் தாய் என்ற விருது வழங்கிக் கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பிறந்த உடனே குப்பைத் தொட்டியில் தூக்கிவீசும் இந்தக்காலத்து மார்டன் பெண்களுக்கு இவரது தியாகமும், மன உறுதியும் ஒரு பாடமாக இருக்கும் என்பது உறுதி.

மேலும் படிக்க