• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வனப்பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த தனியார் மின்வேலியில் சிக்கி மலைவாழ் பெண் பலி.

July 11, 2016 தண்டோரா குழு

கோவை அருகே யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆடு மேய்க்கச் சென்ற மலைவாழ் பெண் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் ஆலந்துறை முல்லியன்காடு லால்பகதூர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி ராமாத்தாள் (37). இவர், தனது வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளை மேய்ச்சலுக்காக நேற்று காலை அழைத்துச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஆடுகள் மட்டும் தானாக வீடு திரும்பியுள்ளது.

இதையடுத்து, அவரது கணவர் வெள்ளியங்கிரி ராமத்தாளை தேடிச் சென்றார். இதில், செம்மேடு கரும்புக்காடுபதி என்ற இடத்தில் சதாசிவம் என்பவர் நிலத்தில் யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் ராமாத்தாள் சிக்கி உயிரிழந்து கிடந்ததைப் பார்த்துள்ளார்.

இது குறித்த தகவலின் பேரில் ஆலாந்துறை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆலாந்துறை போலீஸார் விவசாய நிலத்தின் உரிமையாளர் சதாசிவத்திடம் விசாரணை நடத்தி அவரை கைதுசெய்தனர்.

மேலும் படிக்க