• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? சென்னை உயர்நீதிமன்ற கிளை

January 18, 2018 தண்டோரா குழு

2018ம் ஆண்டுக்கான அரசாணையை வெளியிடாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கொடுத்தது சட்ட விரோதம் என சென்னை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வெளியிடப்பட்ட அரசாணையில் 2017ம் ஆண்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் 2018ம் ஆண்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடாத நிலையில் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம் எனவும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஏன் தடை விதிக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது.

மேலும் படிக்க