• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாசத்தால் கட்டப்பட்ட ஒன்றரை டன் வெயிட்

August 4, 2016 தண்டோரா குழு

சிங்கம் படத்தில் சூர்யா ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் டா பாக்கறியா பாக்கறியா எனக் கேட்கும் வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கிரிக்கெட்டில் கிரிஸ் கெயிலுக்கு நன்றாகப் பொருந்தும்.

அவரது ஒவ்வொரு அடியும் ஒன்றரை டன் வெயிட்டுக்கு சமம் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் அடித்து இதுவரை பல பந்துகள் ஸ்டேடியத்தை விட்டு வெளியே சென்று தொலைந்துள்ளது.

அவ்வளவு ஆர்ம் பவர் எனப்படும் தோள்வலிமை கொண்ட அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு படத்தில் மிகவும் மிருதுவான ஒரு பொருளை வைத்துக் கொண்டு தனது தோள்வலிமையை கட்டிப் போட்டதுபோல் சாதுவாக அமர்ந்திருக்கிறார்.

காரணம் மடியில் படுத்துக்கொண்டு பால் குடிப்பது அவரது செல்ல மகள் என்பது தான். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையைக் கொஞ்சுவது போல பல்வேறு படங்களை எடுத்துப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் அவரைப் பொறுப்பான அப்பா எனப் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க