• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ் – ஆப்பில் புதிய வசதி அறிமுகம்

September 20, 2016 தண்டோரா குழு

பேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்ஆப் உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் Messenger ஆகும். அந்நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் அவ்வப்போது பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது 2.16.272 என்ற புதிய அப்டேட்டில் டேக் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்ஆப். அந்த அப்டேட் மூலம் இனி வாட்ஸ் அப்-பில் குழு சாட் செய்யும் போது, குழு உறுப்பினர்களை தனியாக Tag செய்யலாம்.

Tag செய்வது எப்படி ?

தங்கள் குழுவில் மெசேஜ் அனுப்பும் போது அந்த மெசேஜினை பேஸ்புக், டிவிட்டரில் tag செய்ய உபயோகிக்கப்படும் ‘@’ என்ற குறியீட்டை பயன்படுத்தும் போது நமது contacts list-ல் உள்ள பெயர்கள் தோன்றும், இவ்வாறு நாம் நமது நண்பர்களுக்கு குறிப்பிட்ட மெசேஜினை tag செய்யலாம்.

ஒன்றிற்கு மேற்பட்ட நண்பர்களுக்கும் tag செய்யலாம்.இனி குரூப்பில் உரையாடுபவர்களுக்கு இந்த வசதி சுவாரஸ்யம் ஆக்கும் என்பது உறுதி.

இதுமட்டுமின்றி நீங்கள் tag செய்யும் நபர் அக்குழுவினை mute செய்திருந்தாலும் கூட அவருக்கு அறிவிப்பு செய்தி (Notification message) திரையில் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க