• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிகாரியின் பெயரைச் சூட்டி நன்றி தெரிவித்த கிராம மக்கள்

July 25, 2016 தண்டோரா குழு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மந்தியூரில் வாகைகுளம் ஒரு குக்கிராமம். இதில் 45 குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக தங்களது கிராமத்திற்கு துணைக் ஆட்சியரின் பெயரை வைத்து, வாகைகுளம் என்பதை விஷ்ணு நகர் எனத் திருத்தம் செய்துள்ளனர்.

விஷ்ணு வி நாயர் NIT திருச்சியில் பட்டப்படிப்பை முடித்து 2011ம் ஆண்டு IAS தேர்வடைந்து துணை ஆட்சியராக நவம்பர் 2014 நியமிக்கப்பட்டார்.

நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்த வாகைகுளம் கிராமத்திற்கு கிராமம் மின்சாரம், தண்ணீர், சாலை போன்ற எந்த வசதியுமின்றி கேட்பாரற்று இருந்தது.

அண்டைக் கிராமங்களுக்கு அனைத்து வசதிகளும் கிட்டும் போது வாகைகுளம் மட்டும் தவிர்க்கப்படுவதேன் என்று ஆராய்ந்தார். தொடர்ந்த நிலவிய நிலத் தகராறே எனக் கண்டறிந்தார்.

நிதி ஒதுக்கீட்டு விஷயங்களில் எந்தக் குழப்பமும் இல்லை என்பதை மாவட்டக் ஆட்சித்தலைவரிடம் உறுதி செய்து கொண்ட பின்னர், பேச்சுவார்த்தை மூலம் மக்களிடையே நிலவிய பிரச்சனைகளை தீர்க்கத் தொடர் முயற்சி மேற்கொண்டார்.

பின்னர் மூன்று மாத முடிவுக்குள் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து கிராமத்திற்கு தண்ணீர், மின்சாரம், சாலை போன்ற அனைத்தையும் கிடைக்கும்படி விஷ்ணு செய்துவிட்டார்.

20 வருடங்களாகக் கிடைக்காத வசதிகளைக் கிடைக்கும்படிச் செய்த விஷ்ணுக்கு அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர் அந்த கிராம மக்கள். இதுவரையில் இருட்டில் வாழ்ந்து கொண்டிருந்த தங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவரென்றும், எவரும் பல ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்தபோதும் ,தனிப்பட்ட முயற்சி எடுத்து தங்களை தரமான வாழ்க்கை வாழ வழிவகை செய்த துணை கலெக்டரை பாராட்டும் முகமாகக் கிராம முகப்பில் விஷ்ணு நகர் என்ற பெயர்ப் பலகை வைத்துள்ளனர்.

இது கிராம மக்களால் ஏக மனதாக எடுக்கப்பட்ட தீர்மானமென்றும் தங்களின் நன்றியை வெளிப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவு என்றும் கிராமவாசி மணிகண்டன் என்பவர் தெரிவித்தார்.

தான் தன்னுடைய கடமையைத்தான் செய்ததாகவும், அன்றாடம் செய்யும் அலுவல்களில் இதுவும் ஒன்றே என்றும், இதைவிடப் பெரிய சாதனைகள் செய்தவர்கள் பலர் உள்ளனர் என்றும் விஷ்ணு தெரிவித்தார். கிராம மக்கள் பெயர் பலகை வைத்த விபரம் மற்றவர் சொல்லியே அறிந்ததாகவும் கூறினார்.

மேலும் படிக்க