• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜயகாந்த் குறித்து வதந்திகளை நம்பவேண்டாம் தேமுதிக அறிக்கை

September 1, 2018 தண்டோரா குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் விஜயகாந்த்.

திமுக தலைவர் கருணாநிதி இறப்புக்கு அமெரிக்காவில் இருந்து கண்ணீருடன் வீடியோவில் இரங்கல் தெரிவித்திருந்தார்.பின்னர்,சென்னை திரும்பிய அவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதற்கிடையில்,தற்போது மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வழக்கமான பரிசோதனைக்காகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால்,விஜயகாந்த் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக,தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.அதில்,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார்.யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க