October 26, 2017
தண்டோரா குழு
துறைத்தலைவரின் மறைமுக தொந்தரவால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாககூறி சக மாணவர்கள் அக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அடுக்கும்பாறை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் இயங்கி வரும் அரசு கவின் கலைக் கல்லூரியில் செராமிக் (சுடுமண்) துறையில் இறுதியாண்டு படித்துவந்தார். இந்நிலையில் சொந்த ஊரான வேலூர் சென்றிருந்த பிரகாஷ், நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேலும்,`எனது சாவுக்கு துறைத்தலைவர் (H.O.D) மட்டுமே காரணம்’ என்று 4 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதனால், துறைத்தலைவரின் மறைமுக தொந்தரவால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாககூறி சக மாணவர்கள் அக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, மாணவர் தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் சம்பந்தப்பட்ட துறையாசிரியர்மீ மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் மதியழகன் கூறியுள்ளார்.