• Download mobile app
22 Oct 2025, WednesdayEdition - 3542
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்தோரை தகனம் செய்ய வாடிகன் புதிய வழிகாட்டுதல்

October 26, 2016 தண்டோரா குழு

இறந்தவர்களை தகனம் செய்வது குறித்து ஒரு புதிய வழிகாட்டுதலை கத்தோலிக்க தலைமையகமான வாடிகன் அறிவித்துள்ளது.

ரோமன் கத்தோலிக்க பிரிவில் இறந்தவர்களைப் புதைப்பதே பெரும்பாலும் நடக்கிறது. ஒரு சிலர் தகனமும் செய்கிறார்கள். அப்படி தாங்கள் மிகவும் நேசித்தவர்களின் உடலை எரியூட்டிய பிறகு, அதன் சாம்பலை வீட்டில் வைத்துக் கொள்வதும் தூவுவதும் செய்கிறார்கள். இவ்வாறு செய்ய வேண்டாம் என்று வாடிகன் வலியுறுத்தியுள்ளது.

மாறாக, தகனம் செய்யப்பட்டோரின் சாம்பலைத் தேவாலயத்துக்கோ, கல்லறைக்கோ அனுப்பவேண்டும் என்றும் வாடிகன் கேட்டுக் கொண்டுள்ளது. அவைதான் சேமிப்பை அர்ப்பணிக்க புனிதமான இடம் என்கிறது வாடிகன்.

இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதைத்தான் ரோமன் கத்தோலிக்க திருச்சபை விரும்புகிறது என்றாலும் , அது 1960ம் ஆண்டு முதல் தகனம் செய்வதற்கும் அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து, தகனம் செய்வது அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, இறந்தவர்களின் சாம்பலை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவரவர் முடிவு செய்கிறார்கள். அதற்காகவே புதிய வழிகாட்டுதலை வாடிகன் அறிவித்துள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆலோசகராக இருந்த ஆன்டன் பாலசிங்கம் லண்டனில் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அவரது உடல் எரியூட்டப்பட்டது.

மேலும் படிக்க