• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய தொழிலாளர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்த சவூதி அமைச்சர்

August 4, 2016 தண்டோரா குழு

சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டடங்களில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவதற்காகச் சென்ற இந்தியர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தற்போது அங்கு எண்ணெய் விலை குறைந்ததால் நிறுத்தப்பட்ட கட்டுமானங்களால் வேலை இழந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சம்பள பாக்கியும் உள்ளதால் அவர்களது நிலை மிகவும் மோசமாக உள்ளது என அங்கிருந்து உறவினர்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளனர். இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் அங்குள்ள தூதரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ரேசன் முறையில் உணவு வழங்கி வருகிறது. அவர்களை இந்தியாவிற்கே அழைத்து வருவதற்காக நேற்று சவூதி சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் வி.கே. சிங் அங்குள்ள அதிகாரிகளையும் அமைச்சரையும் சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் அவர்களது நிலை குறித்து பேசிய வி.கே.சிங், அந்நாட்டுத் தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் முபார்ரேஜ் அல் ஹக்பானி உடனடியாக 2,500 தொழிலாளர்களின் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளார் எனவும், மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் இந்தியா இந்தியா திரும்பினாலும் அவர்களது பணப் பயன்கள் கட்டாயம் பெற்றுத்தரப்படும் எனவும் உறுதியளித்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால் அங்குள்ள தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க