• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய சிறுமி சடலமாக மீட்பு

October 25, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய சிறுமியின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ரிச்சர்ட்சன் நகரில் கேரளாவைச் சேர்ந்த வெஸ்லி என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு 4 வயதில் மகளும், 3 வயத்தில் வளர்ப்பு மகள் ஷெரீனும் உள்ளனர்.

கடந்த 7–ந்தேதி, பால் குடிக்க மறுத்ததால், கோபம் அடைந்த அவளுடைய தந்தை வீட்டுக்கு வெளியே உள்ள சாலையில் அவளை விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு ஷெரீனை காணவில்லை. இதுதொடர்பாக ரிச்சர்ட்சன் நகர் காவல் நிலையத்தில் வெஸ்லி புகார் செய்தார். அவருடைய புகாரை ஏற்றுக்கொண்ட அவர்கள், ஷெரினை பல இடங்களில் தேடினர்.

இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 22), வெஸ்லி வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள பாலத்தில் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது, ஷெரீனாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதினர்.

இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் வெஸ்லியை மீண்டும் கைது செய்தனர். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது, வெஸ்லி திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது,“சம்பவத்தன்று, ஷெரீன் பால் குடிக்க மறுத்ததால், கோபம் அடைந்ததால், அவளுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டியபோது, இருமல் ஏற்பட்டு மூச்சுத்திணறி மயங்கி விழுந்தாள். அவளுடைய உடலில் நாடிதுடிப்பு இல்லை, அவள் இறந்துவிட்டாள் என்று கருதி, அவளுடைய உடலை அப்புறப்படுத்திவிட்டேன்” என்று கூறினார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள ஒரு அனாதை இல்லத்திலிருந்து ஷெரினை வெஸ்லி தம்பதியினர் தத்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க