• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பியில் திருமணத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மணமகன்

November 16, 2017 தண்டோரா குழு

உ.பியில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் ஹப்போர் நகரை சேர்ந்த ஷாருக்கானுக்கும் பிஜ்னோர் மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த டான்சிம் என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

தன்னுடைய திருமண விழாவின்போது மணமகன் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்க வேண்டும் என்று மணமகள் விரும்பினாள். தன்னுடைய விருப்பத்தை மணமகனிடம் தெரிவித்தார். மணமகனும் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். அதன்படி, திருமண விழாவிற்கு மணமகன் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அதை கண்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.திருமண சடங்குகள் முடிந்த பிறகு, மணமகனும், மணமகளும் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.

இது போன்ற வினோத சம்பவங்கள் மேற்கத்திய நாடுகளில் அவ்வப்போது நடைபெறுகிறது.ஆனால், அந்த மேற்கத்திய நடைமுறைகள் தற்போது, நமது நாட்டிலும் நடக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க