December 24, 2016
தண்டோரா குழு
திருப்பத்தூரில் பெண் காவலர் மீது திராவகம் (ஆசிட்) வீசிய மர்ம நபர்களைப் பிடிக்க திருப்பத்தூர் டிஎஸ்பி பன்னீர்செல்வம் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் பெண் காவலர் லாவண்யா மீது வெள்ளியன்று இரண்டு நபர்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதில் அவரது முகம், வலது கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து, சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெண் காவலரின் கணவர் உட்பட இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.