• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய-பாக். இடையில் பேச்சுவார்த்தைதான் தீர்வு-ஐநா தலைவர்

December 23, 2016 தண்டோரா குழு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னைகளுக்குப் பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வு என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்திப் பிரிவு துணைத் தொடர்பாளர் பார்ஹன் ஹாக் புதன்கிழமை (டிசம்பர் 21) வலியுறுத்தினார்.

ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் 1௦ ஆண்டு காலப் பணி இம்மாதத்தின் இறுதியில் முடிவடைகிறது. இந்திய – பாகிஸ்தான் இடையே இருக்கும் பிரச்னைகளை நன்கு அறிந்தவர் அவர். இரு நாடுகளும் எப்போதும் நல்ல உறவுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்.

இந்திய பாகிஸ்தானுக்கு இடையே உள்ள பதற்றம் குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பியிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிருபர், “இந்திய – பாகிஸ்தான் பிரச்சினை விஷயத்தில் கவனம் செலுத்த பான் கீ மூன் தனது பதவிக் காலத்தில் தயங்கி வந்தாரே…”என்று கேட்ட போது, பார்ஹான் ஹாக் அதை மறுத்தார். “பான் கீ மூன் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று பல முறை ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தி வந்திருக்கிறார்” என்று பதிலளித்தார் பார்ஹன் ஹாக்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

இந்திய பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை தீர இரு நாடுகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்துவிட்டு, அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என நம்பிக்கை கொண்டவர் பான் கீ மூன்.

இந்த ஆண்டு முழுவதும் நடந்த பல்வேறு ஐ.நா. கூடத்தில் காஷ்மீர் சம்பந்தமான பிரச்னையைச் சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் அதன் முயற்சி நிறைவேறவில்லை. மேலும், அப்பிரச்னை மற்ற 191 உறுப்பினர் நாடுகளை எந்த விதத்திலும் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

மேலும், இந்திய பாகிஸ்தான் பிரச்னைக்குப் பாகுபாடு பார்க்காமல் இரு நாடுகளின் நலனையே கருத்தில் கொண்டிருந்தார். தன்னுடைய நம்பிக்கையிலிருந்து ஒரு போதும் மாறாத தலைவர் பன் கீ மூன்.இவ்வாறு பார்ஹன் ஹாக் கூறினார்.

மேலும் படிக்க