• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திரா உணவகத்தில் கரப்பான் பூச்சியை வேண்டுமென்றே போட்ட இருவர் கைது

October 23, 2017 தண்டோரா குழு

பெங்களூர் உணவு விடுதியில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சியை வேண்டுமென்றே போட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரை சேர்ந்தவர்கள் ஹேமந்த் மற்றும் தேவராஜ்.இவர்கள் இருவரும் ஆட்டோ டிரைவர்களாக பணியாற்றி வருகின்றார். பெங்களூரில் உள்ள காமக்க்ஷிபல்யா என்னும் இடத்தில் உள்ள இந்திரா உணவகத்திற்கு வெள்ளிக்கிழமை(அக்டோபர் 19) உணவருந்த சென்றனர்.

இந்நிலையில், உணவில் கரப்பான் பூச்சி இருப்பதாகக்கூறி,மக்கள் அங்கு உணவருந்தக் கூடாது என்று கூறி ரகளை செய்தனர். உடனே அந்த உணவகத்தின் அதிகாரி காவல்நிலையத்திற்கு தகவல் தந்தார்.

தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு விசாரணை நடத்தினர். அந்த உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்து பார்த்த போது,உணவகத்திற்குள் ஹேமந்த் கரப்பான் பூச்சியை கொண்டு வந்து, அதை உணவில் வைத்தது பதிவாகியிருந்தது.

இதநையடுத்து ஹேமந்த் மற்றும் தேவராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, விளம்பரத்திற்காக அப்படி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, ஏழை எளிய மக்களுக்காக ‘இந்திரா உணவகத்தை கர்நாடக மாநில அரசு அறிமுகப்படுத்தியது. காலை உணவு 5 ரூபாய்க்கும் மற்றும் மத்திய உணவு 1௦ ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க