• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கம்

December 29, 2017 தண்டோரா குழு

திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.கட்சியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக நேற்று(டிச 28) மட்டும் 44 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திருப்பூர் முன்னாள் எம்.பி., சிவசாமி உள்ளிட்ட 65 நிர்வாகிகள் மற்றும் தர்மபுரியில் 65 நிர்வாகிகள், புதுக்கோட்டையில் 48 நிர்வாகிகள் இவர்கள் அனைவரும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க