• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.நா. வுக்குத் தூதராகிறார் இந்திய வம்சாவளிப் பெண்

November 26, 2016 தண்டோரா குழு

இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே (44) ஐ.நா. சபைக்கான அமெரிக்கத் தூதராக நியமித்து கெளரவித்துள்ளார் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு ட்ரம்ப். நிக்கி ஹாலே தற்போது ஐ.நா சபையின் அமெரிக்க தூதர் பதவி அமெரிக்க அமைச்சருக்கு இணையான பதவியாகும்.

அமெரிக்க அரசு நிர்வாகத்தில் மந்திரி சபை அந்தஸ்துடன் கூடிய பதவியை இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் வகிக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் நிக்கி ஹாலே வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமை பெற்றுவிட்டார்.

நிக்கி ஹாலேவின் பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். அமெரிக்க தேர்தல் முடிந்து டிரம்ப் வெற்றிக்குப் பின்னர் நிர்வாகப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நிக்கி ஹாலேதான்.

2011-ம் ஆண்டு முதல் தெற்கு கலிபோர்னியாவின் ஆளுநராகப் பணியாற்றி வந்தவர் நிக்கி. மிகக் குறைந்த வயதில் ஆளுநராகப் பொறுப்பேற்றவர் இவர்.

நிக்கியின் நியமனம் குறித்தி அறிவித்த டொனால்டு டிரம்ப், “ஆளுநர் நிக்கி ஹாலே, மாகாணத்தின் நன்மைக்காகவும், அமெரிக்காவின் முன்னேற்றத்திற்காகவும், முக்கியமான பல கொள்கைகளை எடுத்து, மக்களை வழி நடத்தியுள்ளர்” என்று பாராட்டினார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசிய நிக்கி, “இரண்டு காரணங்களுக்காக இந்தப் புதிய பதவியை ஏற்றுக்கொள்கிறேன். இந்தப் பதவியில் நாட்டின் மேம்பாட்டில் முக்கிய பங்களிப்பேன் என்று அதிபராக இருக்கும் டிரம்ப்ஸ் வைத்துள்ள நம்பிக்கை. இரண்டாவது, கடந்த ஆறு ஆண்டுகளாக நான் ஆளுநர் பதவியில் இருந்தபோது வலுவான அரசியல் அறிவு கிடைத்த அனுபவம்” என்று கூறினார்.

அமெரிக்காவின் ஆளுநர்களில், உலகளவில் மிகவும் மரியாதைக்குரிய ஒருவராகத் திகழும் நிக்கி, முதலில் தனது குடும்ப தொழில்களை கவனித்துக் கொண்டிருந்தார். ஆளுநரான பின், பொருளாதார வளர்ச்சியில் அக்கறை கொண்டு, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல உதவிகளைச் செய்துள்ளார்.

ஐ.நா. சபை தூதராக நிக்கி நியமனம் பெற்றதன் மூலம், அமெரிக்காவின் இந்திய வம்சாவளியினர் பெரும் பலமும் உற்சாகமும் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க