November 6, 2017
தண்டோரா குழு
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க நாட்டின் குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப், உலகமெங்கும் உள்ள சீக்கியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்ககுடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு இரண்டு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். “சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரும் அதன் முதல் குருவாக இருந்தவருமான குரு நானக் தேவ்ஜியின் பிறந்த நாளை கொண்டாடும் உலகமெங்கும் உள்ள சீக்கியர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை, அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 1௦௦ ஆண்டுகளுக்கு மேலாக,அமெரிக்கா ராணுவம் மற்றும் பொது சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபரிமித வளர்ச்சிக்கு,அங்குள்ள சீக்கியர்களின் பங்கு மிகவும் அதிகம் என்று டிரம்ப் பெருமையுடன் கூறினார்.