• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

July 12, 2016 தண்டோரா குழு

கோவை அருகே ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணேசபுரம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று காலை நடந்து சென்றவர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதைப் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் எஸ்.ஐ சான்மா தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் நடத்திய சோதனையில் பெண்ணின் உடல் இரண்டு துண்டாகவும், ஆணின் உடல் பலத்த காயத்துடனும் இருப்பதைப் பார்த்து சடலங்களைக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் இருவரும் கோத்தகிரி கொங்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அதில் ஆண் ராஜமாணிக்கம் மகன் திவாகர்(20) எனவும் பெண் பரமேஸ்வரன் மகள் ரம்யா(19) எனவும் தெரியவந்தது. இது குறித்து மேலும் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும், காதலுக்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து நேற்று இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இருவரின் உறவினர்களும் குவிந்ததால் மருத்துவமனை வளாகமே சோகத்தில் மூழ்கியது.

மேலும் படிக்க