• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.

June 10, 2016 தண்டோரா குழு

திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடை பாதையில் சென்ற பக்தர்களை சிறுத்தைப்புலி தாக்கியது. இதையடுத்து திருமலை வனத்துறை அதிகாரிகள்அப்பகுதியில் முகாமிட்டு இரண்டு சிறுத்தைப் புலிகளை கூண்டுவைத்து பிடித்தனர்.

பின்னர் சிறிதுகாலம் அப்பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் குறைவாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக அப்பகுதியில் மீண்டும் சிறுத்தைப் புலி நடமாட்டம்அதிகரித்துள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதற்கான ஆதாரம்கிடைக்காததால் குழம்பி வந்த வனத்துறையினர் தற்போது வலுவான ஆதாரம்கிடைத்ததை அடுத்து அந்த சிறுத்தைப் புலியை குண்டுவைத்து பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அந்தச் சிறுத்தைப்புலி நேற்று இரவு திருப்பதியில் பாபநாசம் செல்லும்வனப்பாதையை ஒட்டி உள்ள உடுப்பி மடத்தில் சிறுத்தைப் புலி நடமாட்டம் அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு செய்துள்ளது. அந்த மடத்தின் மதில் சுவரை தாண்டி இரவு நேரத்தில் உள்ளே குதித்து சுமார் ஒரு மணி நேரம் அங்கும் இங்கும் உலாவியுள்ளது.

பின்னர் எந்த இரையும் இல்லாததால் திரும்பி சென்றுள்ளது. இதைப் பார்த்த வனத்துறையினர் அது எங்கிருந்து வந்தது என்பதையும் அடுத்து வரும் வலை எது என்பதையும் கணக்கிட்டு அந்தப் பாதையில் கூண்டுவைத்து சிறுத்தைப் புலியை பிடிக்கத்திட்டமிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க