• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமான விபத்தில் பயணிகளைக் காப்பாற்றிய வீரர் மரணம்

August 4, 2016 தண்டோரா குழு

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் நேற்று துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள், விமான ஊழியர்கள் உட்பட 282 பேரும் விரைவாக வெளியேற்றப் பட்டதால் உயிர் பிழைத்தனர். இந்தச் சம்பவத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 போயிங் வகை விமானம் நேற்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. சுமார் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் அதில் பயணித்துள்ளனர்.

துபாயில் தரை இறங்கிய விமானம் சிறிது தூரம் சென்றதும் பைலட் கட்டுப்பாட்டை இழந்ததால் படுவேகமாக ஓடியுள்ளது. சில தூரம் சென்றதும் நின்றுவிட்டது. இதையடுத்து பயணிகளை அவசரமாக வெளியேற்றி உள்ளனர். ஆனால் அதற்குள் விமானத்தின் இன்ஜின் திடீர் என வெடித்தது.

இதையடுத்து விமானம் தீ பிடித்து ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்துள்ளனர். உடனடியாக அவர்கள் தீயை அணைத்ததோடு மீட்புப் பணியில் ஈடுபட்டு 282 பயணிகளையும் காப்பாற்றினர்.

இந்த விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ராசல் அல் கைமாவைச் சேர்ந்த ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் என்பவர் உயிரிழந்தார். பிறரைக் காப்பாற்றுவதற்காக உயிரைத் தியாகம் செய்த முகமது ஹசன் போற்றத்தக்கவர் என்று, துபாய் சிவில் விமானத்துறை தெரிவித்துள்ளது

மேலும் படிக்க