• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்கம் தாக்கி, சர்க்கஸ் பயிற்சியாளர் மரணம்

December 3, 2016 தண்டோரா குழு

சர்க்கஸ் நிகழ்ச்சியில் பயிற்சியாளரை சிங்கம் தாக்கியதால், அவர் பலத்த காயமடைந்து இறந்தார். எகிப்து நாட்டின் வடபகுதியில் நடந்த இச்சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலெக்சாண்டரியா நகரில் சர்க்கஸ் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சம்பவத்தின்போது, அந்த நிகழ்ச்சியில் ஷஹீன் இஸ்லாம் (35) என்ற பயிற்சியாளர், கூண்டில் இருந்த சிங்கங்களை வைத்து சர்க்கஸ் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு சிங்கத்தின் முகத்து நேராக நின்று, நிகழ்ச்சியை அவர் நடத்திக் கொண்டிரு்நதபோது, எதிர்பாராத விதமாக அந்த சிங்கம் அவர் மீது பாய்ந்து, தாக்கியது. ஒரே ஒரு கம்பு மட்டும் வைத்திருந்த அவரால், திடீரென நேர்ந்த சம்பவத்தை எதிர்கொள்ள இயலவில்லை.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அலறியதால், அங்கிருந்த மற்ற பார்வையாளர்கள் ஓடிவந்து, அவரை சிங்கத்தின் பிடியிலிருந்து இழுத்தனர்.
காயங்களுடன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

சிங்கத்தின் தாக்குதலில் அவருடைய தலை மற்றும் மார்பு எலும்புகள் உடைந்து போய்விட்டன. அவரது முகம், கழுத்து, வயிற்றுப்பகுதிகளில் ஆழமான காயம் ஏற்பட்டதால், ரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டது. இதனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“பத்தாண்டுகளாக கொடிய விலங்குகளைப் பழக்கி வந்தவர் என் சகோதரர். முரட்டு விலங்குகளுக்குப் பயிற்சி அளிப்பதில் அனுபவம் மிக்கவர் அவர். இப்படி நடந்தது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரைத் தாக்கிய சிங்கம் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட புதிய சிங்கம்” என்று அவரது சகோதரர் கூறினார்.

மேலும் படிக்க